சுதாரித்துக்கொண்ட விஜய்-அதிரடியாக களத்தில்!
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம் தற்போது பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கவிருக்கிறது. அந்த வகையில் பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து பிரமாண்ட படங்களை கொடுக்க முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளது. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் 50 வது படத்தை தயாரிக்கும் கிளவுட் நைன், இளைய தளபதி விஜயின் கால்ஷீட்டையும் வாங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளது தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம்.
இளைய தளபதி விஜய் நடிக்கும் இந்தப்படத்தை லிங்குசாமி இயக்குவார் என்று தெறிகிறது. விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் “காவல் காதல்” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் “வேலாயுதம்” படத்தை பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறார். அதற்கடுத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “3 இடியட்ஸ்” தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் விஜய். இந்தப் படம் “எந்திரன்” ரிலீசுக்குப் பிறகு தொடங்கவிருக்கிறது.
சீமான் இயக்கத்தில் “பகலவன்” படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இந்தப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தானு தயாரிக்கிறார். இதனையடுத்து சக்ஸஸ்புல் காம்பினேஷனான விஜய் – சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சொளத்ரி கூட்டணி விரைவில் இணையவுள்ளது. இதற்கான கதை விவாதம் சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்துவருகிறது.
ஒரேமாதிரி கதையில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது சுதாரித்துக்கொண்ட விஜய், கவனமாக கதை தேர்வு செய்து “காவல் காதல்”, “வேலாயுதம்”, ஷங்கர் இயக்கத்தில் “3 இடியட்ஸ்” தமிழ் ரீமேக், “பகலவன்”, சூப்பர்குட் பிலிம்ஸ் படம், லிங்குசாமி இயக்கும் படம் என அதிரடியாக களத்தில் இறங்கியிருப்பது விஜய் ரசிகர்களை ம்ட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.