பிரமாண்ட தொடக்கம்-வேலாயுத்தில் அசத்தும் விஜய்!
06/07/2010 17:24
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு பிரமாண்ட தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். காதலுக்கு மரியாதை என்ற மெகா ஹிட் படத்தை தயாரித்தவர் ரவிச்சந்திரன். அப்படத்துக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. நாடோடிகள் புகழ் அனன்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம் ராஜா இயக்குகிறார்.