புதிய அவதாரத்துடன் இளைய தளபதி!
இளைய தளபதி விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் சரிவர போகாததால் சில பிரச்சினைகளை சந்தித்தார். இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த முறை அவர் நல்ல கதையம்சமுள்ள படங்களையும் பெரிய இயக்குனர்களையும் தேர்வு செய்துள்ளது அவரது ரசிகர்களையும் திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது அவர் தேர்வு செய்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் ஹிட் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர்களே.
இயக்குனர் சித்திக். இவர் மளையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஹிட் டைரக்டர். மளையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இவர் ஹிட் இயக்குனரே. ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர். இப்போது அவர் மளையாளத்தில் இயக்கிய பாடிகாட் என்ற படத்தை காவல் காதல் என்ற பெயரில் தமிழில் இயக்குகிறார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.
அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம் என பெரிய இயக்குனர்களை கொண்டு புதிய அவதாரத்துடன் தனது அடுத்த இன்னிங்சை சிறப்பாகத் தொடங்கியுள்ளார் இளைய தளபதி.
தளபதியின் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.