மருத்துவர் புகழேந்தியாக விஜய்!
தமது இருபத்தியாறாவது வயதிலேயே டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நடிகர் இளையதளபதி விஜய். விஜய் வாங்கியது கௌரவ டாக்டர் பட்டம் என்றாலும் இப்போது நிஜமாகவே டாக்டராக நடிக்க இருகிறார் விஜய்!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு.
ஆனால் சிறையில் இருந்தபடியே “வென்றது ஆரியம், துணை நின்றது திராவிடம்” என்ற புத்தகத்தை எழுதி வருகிறார் சீமான். இது ஒருபுறம் இருக்க, சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் பகலவன் படத்தில் விஜய் பயிற்சி மருத்துவராக நடிக்க இருப்பதாக சீமான் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் டாக்டர் புகழேந்தி என்ற இளம் மருத்துவர் ஏழைமக்களுக்காக காசு வாங்காமல் இலவச மருத்துவ பணி செய்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாரம் சீமான். அப்போது மருத்துவதுறையில் நடக்கும் ஊழல், போலி மருந்துக் கம்பெனிகள் பற்றி புகழேந்தி பகிர்ந்துகொண்டதை மனதில் வைத்திருந்த சீமான், இப்போது இவரை ரோல் மாடலாக வைத்து பகலவன் படத்துக்கான விஜய் கேரக்டரை உருவாக்கியிருப்பதாக தகவல் கிடைகிறது அவரது சகாக்கள் தரப்பில் இருந்து.
மேலும் விஜய் கேரக்டருக்கும் புகழேந்தி என்ற பெயரையே வைத்திருக்கிறாராம் சீமான்! பகலவன் உயிர்பெரும் நாளுக்காக காத்திருக்கிறார்கள் சிமானின் தம்பிகளும், விஜயின் ரசிகர்களும்.