விஜய்-ஷங்கர் பிரம்மாண்டக் கூட்டணி!
விரைவில் விஜய்-ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்பு. இந்தியில் ஆமிர்கான், மாதவன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் 3 இடியட்ஸ். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கவுள்ளார் ஷங்கர். ஆமிர்கான் ஏற்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார், மற்ற இரண்டு நாயகர்கள் தேர்வு நடந்து வருவதாக தெரிகிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் இப்படத்தை தயாரிக்கிறது.
ஷங்கர் இதுவரை எந்தப் படத்தையும் ரீமேக் செய்து இயக்கியதில்லை. இப்போதுதான் முதல் முறையாக இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் யார் நடிப்பார்கள் என்பது தெரியவில்லை. தற்போது எந்திரன் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஷங்கர் பிசியாக இருப்பதால் இதை முடித்து விட்டு 3 இடியட்ஸுக்கு வருவார் எனத் தெரிகிறது.