வேலாயுதம்-சிறப்பு முன்னோட்டம்!

30/07/2010 18:36

 வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி எழுதிய கதையின் மூலக்கருவை மையமாக வைத்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக வேலாயுதம் படத்திற்கான திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளாராம் இயக்குனர் ராஜா.

முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள். கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம். அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயக‌னை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்‌போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம்.

நகரத்தில் எழுத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற பத்திரிக்கையாளர் ஜெனிலியா.  கிராமத்தில் அப்பாவி இளைஞனாக விஜய். ஜெனிலியாவால்தான் விஜய் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகிறது. கிராமத்தில் அம்மா,அப்பா, தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார் விஜய். அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் ‌படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

வேலாயுதம் படத்தில் சந்தானம் மற்றும் சத்யன் காமெடியை கவனிக்க, விஜய் ஆன்டணி இசையமைக்கவிருக்கிறார்.

பட்டய கிளப்புங்க பாஸு…


https://www.facebook.com/pages/vijay-racikan-EXPRESS/106660206022298?v=wall