Kavalan in December
விஜயின் காவலன் திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளிவரவில்லை. முதலில் இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என்றே கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது படத்தின் இயக்குனர் சித்திக் இப்படத்தினை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள போதிலும், இயக்குனர் அவசரஅவசரமாக பட வேலைகளை முடிக்க விரும்பவில்லை. விஜயின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக வெற்றி பெறாததால், விஜயின் ரசிகர்கள் பலர் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இப்படத்திற்கான அசினின் கால்ஷீட் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இருப்பினும் சில பாடல் காட்சிகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது. காரைக்குடி, கும்பகோணம், வேலூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
சமீபத்தில் “பாங்காங்”ல் இருந்து திரும்பிய படக்குழு கடைசி கட்ட படப்பிடிப்பிற்காக கேரளா செல்லவுள்ளது. பின் பாடல் காட்சிகளுக்காக ஐரோப்பாவின் சில நாடுகளுக்கும் பயணிக்க உள்ளது.
இப்படத்தின் முதன்மைப் பதிப்பான “பாடிகார்ட்” மலையாளப் படம் கமர்சியல் அம்சங்களை அதிகமாக கொண்டிருக்கவில்லை என்ற போதிலும், விஜயை வைத்து இயக்குவதால் இப்படத்தில் பல கமர்சியல் அம்சங்களை இயக்குனர் சித்திக் சேர்த்துள்ளார். இதனால் படத்தினை முடிப்பது சிறிது தாமதமாவது இயல்பே என்கின்றனர் பட யூனிட்டில்.
விஜய்-சித்திக் கூட்டணியில் உருவான “ப்ரெண்ட்ஸ்” படம் இமாலய வெற்றி பெற்றது. அதுபோல் இந்தப்படமும் வெற்றியடைய வேண்டும் என்பதில் இயக்குனர் சித்திக் கவனமாகயிருப்பதாகவும் சொல்கின்றனர் பட வட்டாரத்தினர்.
ஆக, விஜய் ரசிகர்களுக்கு டிசம்பரில்தான் விருந்தளிக்கப் போகிறான் “காவலன்”